Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம் பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா.

0

'- Advertisement -

Ad banner

சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழா

நேற்று வியாழக்கிழமை பொன்மலை ஆர்மரிகேட் அருகில் உள்ள டாக்டர். அம்பேத்கார் இரயில்வே மக்கள் மன்றத்தில் நடைபெற்ற சதர்ன் இரயில்வே பென்ஷனர்ஸ்’ சங்கம்-பொன்மலையின் 42-வது ஆண்டு நிறைவு விழாவும் மற்றும் 2025-26 ஆம் ஆண்டின் பொது மகாசபைக் கூட்டத்தில் சங்க தலைவர் T.S.கணேஷ் தலைமையில்,

 

செயல் தலைவர் வெங்கடேஷன், இனண செயலாளர்கள் பழனிவேல், சம்பந்தம், கருப்பையா, நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

விழாவில் ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை செயலாளர் P.ராமசாமி உரையாற்றினார்.

வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் எம்.மகேந்திரன் வாசித்தார்.    விழாவிற்கு பொன்மலை ரயில்வே பணிமனைஉயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

தீர்மானத்தை உதவி செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் வாசித்தார். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

1) கொரோனா வியாதி வந்தபொழுது, அதாவது 01-07-2020-ல் இருந்து 30-06-2021 வரை அதாவது 18 மாதகாலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்ட கிராக்கி படி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவித்து அனைவருக்கும் வழங்க வேண்டுகிறோம்.

2)50% கிராக்கிப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து அடிப்படை ஓய்வூதியமாக வழங்க வேண்டுகிறோம்.

3) தற்சமயம் வழங்கப்படும் FMA ரூபாய் 1000/- என்பதனை ரூபாய் 5000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டுகிறோம். FMA-ஐ அனைத்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெறப்போகும் இரயில்வே ஊழியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி, பாரபட்சமில்லாமல் வழங்க வேண்டுகிறோம். வெளி நோயாளிப் பிரிவில் ஓய்வுபெற்ற அனைவருக்கும் / குடும்ப ஓய்வுதியர்களுக்கும் மருத்துவ வசதிகள் வழங்க வேண்டுகிறோம். அதாவது மருத்துவப் படியுடன் கூடிய வெளிநோயாளிப் பிரிவிலும் உள் நோயாளிப் பிரிவிலும் மருத்துவ வசதிகள் அளிக்கவேண்டுகிறோம்.

4) 65,70 மற்றும் 75 வயது உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் முறையே 5%, 10% மற்றும் 15% அதிகப்படி ஓய்வூதியம் பார்லிமென்டரி கமிட்டி சிபாரிசுபடி வழங்க வேண்டுகிறோம்..

5) கம்யூடேஷன் தொகை பிடித்தத்தை 15 வருடத்தில் இருந்து 10 வருடம் 8 மாதமாக குறைத்து 10 வருடம் 8 மாத முடிவில் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டுகிறோம்.

6) குடும்ப ஓய்வூதியத்தை 30% லிருந்து 40% ஆக உயர்த்தி வழங்க வேண்டுகிறோம்.

7) ஓய்வூதியர்கள் அனைவருக்கும் வருமான வரி விலக்களித்து, அவர்கள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து வருமான வரிப் படிவம் சமர்ப்பிப்பதிலிருந்தும் விலக்களிக்க வேண்டுகிறோம்.

8) மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டணத்தில் முன்பு அளித்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டுகிறோம்.

9) வங்கிகளில்/அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் சான்றிதழ் (Life Certificate) அளித்ததற்கான ஒப்புதல் சான்று (Acknowledgement) வழங்க வேண்டுகிறோம். இதுப்போன்ற 18 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

விழாவிற்கு அப்துல் அலீம், ஐனார்த்தனராஜீ,சண்முகம், கேசவன், நமசிவாயம், முருகானந்தம், கே.சி.நீலமேகம், பழனிச்சாமி, இராமச்சந்திரன், பொன்னுதுரை, சாம்சன் போஸ், ஸ்ரீதரன் மற்றும் 300 மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

முடிவில் உதவி செயலாளர் ஏ.வைகுண்ட முர்த்தி நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.