திருச்சி கேகே நகரில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி தவறி விழுந்து சாவு .
திருச்சி கே.கே. நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது . இந்த முதியோர் இல்லத்தில் 83 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 19 ந் தேதி அவர் அலமாரியை திறந்து கொண்டு இருந்தார். அப் பொழுது திடீரென்று எதிர்பாராதமாக கீழே தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த முதாட்டி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

