உய்யக்கொண்டான் மற்றும் குடமுருட்டி வாய்க்கால்களை தூர்வாரி நீர் நிலைகளை காப்பாற்றுங்கள்..தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மனு


நீதிமன்றம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள் .
குறை தீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு கோரிக்கை.
திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு கலந்து கொண்டு உதவி கலெக்டர் சாலை தவளவனிடம் கோரிக்கை மனு அளித்தார் .
அதில் அவர் கூறியிருப்பதாவது :-
சம்பா சாகுபடி செய்ய நாற்று போடுவதற்கு காவிரியில் 5000 கன அடி தண்ணீரை உடனே திறந்து விட உத்தரவிட வேண்டும்.
உய்யக்கொண்டான் மற்றும் குடமுருட்டி வாய்க்கால்களை தூர்வாரி நீர் நிலைகளை காப்பாற்றுங்கள்.
காவிரி ஆற்றில் பரவலாக வளர்ந்துள்ள நாணல் செடிகளை அப்புறப்படுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்ய வேண்டும்.
காவிரி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்கக் கூடாது.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை போக்க போக்குவரத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

