Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாயமான இளம் பெண்,கஞ்சா புகையிலை விற்ற நபர்கள்,அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் என திருச்சியில் நடைபெற்ற கிரைம் செய்திகள் ….

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் நடைபெற்ற இன்றைய கிரைம் செய்திகள் ….

எடமலைப்பட்டி புதூர் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவன் மாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மகன் கமலேஷ் (வயது 14) இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் இவர் எடமலை பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு கருணை இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார் . இந்நிலையில் நேற்று அங்கிருந்து வெளியே சென்றவர் மீண்டும் காப்பகம் திரும்பவில்லை .. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை . இது தொடர்பாக

கருணை இல்லத்தின் பொறுப்பாளர் அந்தோணி ஜெயிக்கர் எடைமலைப்பட்டி புது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் . அந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கமலேசை தேடி வருகின்றனர்

2….

பாலக்கரையில்  இளம் பெண் மாயம் .. தந்தை போலீசில் புகார் ..

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த 1 ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை . உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் என பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது தந்தை பாலக்கரை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 .

கேகே நகரில்

ரெயில்வே மேம்பாலம் அருகில் வாலிபர் பிணம்

யார் அவர்? போலீசார் விசாரணை

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் செட்டியாபட்டி ரெயில்வே பாலம் அருகில் சுமார் 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கேகே நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த வாலிபர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற முழு விவரம் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோ அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கேகே நகர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

4.உறையூரில்  கஞ்சா விற்பனை செய்தவர் கைது …

திருச்சி உறையூர் சாலை ரோடு அருகில் கஞ்சா விற்பனை செய்யவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ராம்ஜி நகர் காந்தி நகரை சேர்ந்த சதீஷ் (வயது 42) என்பவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சா மற்றும், இரு சக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர்.

5.ஸ்ரீரங்கத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலத்தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 57) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்து அவரிடமிருந்து 2,084 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.