திருச்சியில் குழந்தைகள் கைப்பேசி பயன்பாட்டை குறைக்கும் முயிற்சியாக 500 மாணவர்கள் ஒன்றிணைந்து “கற்பனைச் சிறகுகள்” என்ற தலைப்பில் ஓவியம் வரைந்த சாதனை

திருச்சியில் ஓவியத்தில் மாபெரும் உலக சாதனை குழந்தைகள் கைப்பேசி பயன்பாட்டை குறைக்கும் முயிற்சியாக 500 மாணவர்கள் ஒன்றிணைந்து “கற்பனைச் சிறகுகள்” என்ற தலைப்பில் ஓவியம் வரைந்த சாதனை முயற்சி
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியானது ஜெட்லி உலக சாதனை புத்தகம் மற்றும் ரெக்கார்ட்ஸ் இந்தியா அகாடமி புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது .
இந்நிகழ்ச்சிகளில் நடுவர்களாக கலை வளர்மணி ஜெயவர்த்தினி மற்றும் பிரேமலதா ஆகியோர் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியானது மாலை 5 மணிக்கு தொடங்கி ஆறு மணிக்கு முடிவுற்றது திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்ற இந்த நிகழ்வில் ரயில்வே தமிழரசன்,முனியாண்டி,மற்றும் 1000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டார்கள்.
போட்டி ஏற்பாடுகளை அரவிந்த் அகாடமி நிறுவனர் ராஜலட்சுமி அரவிந்த் ஏற்பாடு செய்திருந்தார்.

