Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை உடனடியாக மூட வேண்டும். மகஇக திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவா

0

'- Advertisement -

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு மிக அருகில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்த மதுக்கடைகள் என அடையாளம் காணப்பட்டு அவை ஒவ்வொன்றாக அதிரடியாக மூடப்பட்டன.

 

Ad banner

அந்த வகையில், புதிய அரசின் இந்த அதிரடி திட்டத்தின் கீழ் தற்போது மொத்தம் 717 டாஸ்மாக் கடைகளும் முழுமையாகப் பூட்டப்பட்டு உள்ளது.

 

திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய மகஇக மாவட்ட செயலாளர் ஜீவா கூறிய போது;

717 கடைகளை தமிழக அரசு தற்போது மூடி உள்ளது வரவேற்க்க கூடியது தான்.

இதேபோல் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றுக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் உடனே அந்த கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.