Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடிய 2 பெண்கள் தலைமறைவு.

0

'- Advertisement -

திருச்சியில் பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் தலைமறைவு.

Ad banner

கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை.

திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டு பெண்கள் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டை காவல் நிலைய போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கோட்டை காசியப்பிள்ளை சந்தை சேர்ந்தவர் மங்கம்மாள் ( வயது 72 ) இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கே வந்த இரண்டு பெண்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்காக வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் சென்று உள்ளனர்.

அப்போது அவருக்கு உடலில் ஏதும் பாதிப்பு உள்ளதா என கேட்டுள்ளனர் இது குறித்து மங்கம்மாள் கூறிய போது அதை சரி செய்வதாக அவரது கையைப் பிடித்துக் கொண்ட ஒரு பெண் அவரை இறுக பற்றிக் கொண்டார் அப்போது மற்றொரு பெண் வீட்டுக்குள் பெட்டியில் வைத்திருந்த மூன்றரை பவுன் மதிப்புள்ள ஒரு தங்க செயின் மற்றும் இரண்டரைப் பவுன் ஒரு தங்க செயின் என இரண்டு செயின்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலிலேயே வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி இடம் செயின் திருடி சென்ற சம்பவம் திருச்சி மக்களிடம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.