இன்று காலை திருச்சி லால்குடி அருகே ரயிலில் அடிபட்ட அடையாளம் தெரியாத வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் .தெரிந்தவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்
இன்று (06.06.2026) சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்பாக லால்குடி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்படி நபர் லால்குடி அருகே உள்ள ஏதோ ஒரு ஊர் என்று மட்டும் சொல்கிறார், இடது மார்பில் புத்தர் உருவத்தை பச்சை குத்தியுள்ளார்,
மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் ரயில்வே காவல் நிலையம் விருத்தாசலம் 94981 39967 மற்றும்
94981 01987
இவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது தெரிந்தால் உடனடியாக மேற்கண்ட தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு பேசி திருச்சி அரசு மருத்துவமனைக்கு வருமாறு காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது

