பிரபல பாடகி ஸ்வாகதாவை தனது ஸ்டூடியோவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரபல தமிழ்பட இசை அமைப்பாளர்
பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்.. யார் அந்த முன்னணி இசையமைப்பாளர்?

பிரபல பாடகியாக இருந்த ஸ்வாகதா கிருஷ்ணன் தன்னை ஒரு முன்னணி தமிழ் இசையமைப்பாளர் பாலியல் ரீதியாக தவறாக நடந்தார் என்கிற அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அந்த மியூசிக் டைரக்டர் தன்னிடம் சிறிது சிறிதாக செலவுக்கு பணம் வேண்டும் எனக் கூறி பல லட்சம் வாங்கியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
ஸ்டூடியோவில் வைத்து அத்து மீறியது தொடர்பான சிசிடிவி வீடியோவைக் காட்டியும் என்னை பிளாக் மெயில் செய்தார். நான் இந்த வீடியோவை ரிலீஸ் செய்தால் உன்னுடைய மானம் தான் போகும். எனக்கு எந்த பயமும் இல்லை, நான் காவல்துறைக்கு போகிறேன் என்று கூறினேன். அதன் பின்னர் எனது காலில் எல்லாம் விழுந்து மன்னிப்பு கேட்டார். எனது வீட்டிற்கே வந்து எனது காலில் விழுந்தார். எனது சகோதரி மாயா மற்றும் மாயாவின் தோழிகள் கண் முன்னே தான் எனது காலில் விழுந்தார்
அது ஜீ.வி. பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், இமான் ஆகியோர் இல்லை என மறைமுகமாக ஹிண்ட் கொடுத்துள்ளார்.
அதனால் தான் நான் சினிமாவே வேண்டாம் என சொல்லி சென்னையில் இருந்து வெளியேறி ரிஷிகேஷில் செட்டில் ஆகிவிட்டதாக கூறி உள்ளார். அங்கு அவர் 6 வருடமாக துணி வியாபாரம் செய்து வருகிறார்.
நான் அவரது மியூசிக் கார்டுகளை திருடி விட்டேன், எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறி மற்றவர்களைச் சமாளித்தார். எனது பெற்றோர்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியும், இதைச் சொன்னதும் அவர்கள் பயந்து, எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எனது சகோதரி மாயா தான் என்னை தமிழ்நாட்டில் இருந்து ரிஷிகேஷிக்கு அனுப்பி வைத்தார். நான் முறையாக சட்டப்படி அந்த இசையமைப்பாளரை அம்பலப்படுத்துவேன்” என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் யார் அந்த காம கொடூரன் இசையமைப்பாளர் யார் என்று கேட்டு வருகிறார்கள்.
தற்போது இது குறித்து பாடகி youtube இல் அளித்துள்ள பேட்டி பரபரப்பாக பரவி வருகிறது

