திருச்சியில் நடந்த விபத்தில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு.

திருச்சி உறையூர் டி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் ( வயது 27 ). திருமணமான இவர் நேற்று நள்ளிரவு சாத்தனூரில் இருந்து எல்.ஐ.சி. காலனி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்தது உள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவ குழு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

