திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 21). கடந்த 27ந் தேதி இரவு 3 வாலிபர்கள்
இவரது வீட்டருகே சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்து விட்டு குணசேகரன் அங்கு வந்து இரவு நேரத்தில் சத்தம் போடாதீர் என கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அந்த இடத்தை விட்டுச் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில், 3 வாலிபர்கள் அங்கு
வந்து, குணசேகரனை திட்டி, அவரது வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே இரண்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை மற்றும் மது பாட்டில்களை வீசி, சுவரில் தீ வைத்து, கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.அந்தப் புகாரின் பேரில் திருமணம் காவல் நிலைய போலீசார் சம்படத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஸ்ரீரங்கம் ஜெ. ஜெ.நகர் பகுதியை சேர்ந்த பாலபிரியன் (வயது18) மணிகண்டன் (வயது 20) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர். மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 20) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.

