
திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள டீக்கடை மற்றும் சூப்பு கடை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்து இருக்கிறார்கள்.சில கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த சிறிய தொகை பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இன்று காலை கடையை திறக்க வந்த அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகலறிந்து செசன்ஸ் கோர்ட காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் திருட்டு முயற்சி நடைபெற்று இருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக காவல்துறை இதன் பேரில் நடவடிக்கை எடுத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

