Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்காக யார் நன்மை செய்வார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன்

0

'- Advertisement -

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்களுக்காக யார் நன்மை செய்வார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் பேச்சு.

Ad banner

திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எடத்தெரு வடக்கு பகுதி அதிமுக சார்பில்  மாவட்ட துணைச்செயலாளர் வெல்லமண்டி சண்முகம், தலைமையில், பகுதி செயலாளர் எடத்தெரு பாபு ஏற்பாட்டில், எடத்தெரு அண்ணா சிலை, கிருஷ்ணன் கோவில் தெரு, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. கொடி ஏற்றுவிழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக கொடியை, மாநகர், மாவட்ட செயலாளர், ஆவின் முன்னாள் பெருந்தலைவர் என்ஜீனியர் கார்த்திகேயன்,அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் அதிமுக மாநகர், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பேசும் பொழுது தற்பொழுது தான் சட்ட

மன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. இந்த இடைத்தேர்தல் வருவதற்கு யார் காரணம் ? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.அதிமுக ஆட்சி காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக செய்து உள்ளார்கள். மக்களின் அடிப்படை தேவைகளை என்றைக்கும் உடனடியாக செய்து கொடுப்பது அதிமுக. ஆகவே வருகின்ற இடைத் தேர்தலில் மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் மாநகர பொருளாளர் மார்க்கெட் தங்கராஜ், மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,வி பி எஸ் மகாதேவன், சகாபுதீன், பாலசுப்பிரமணி, என்ஜினியர் சரவணகுமார், பாலமோகன்ராஜ், வரகனேரி ராஜேந்திரன், நத்தர்ஷா, சுரேஷ்குப்தா, சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், பாலாஜி, டிஎஸ்எம் வசந்தம் செல்வமணி,கிராப்பட்டி கமலஹாசன், உறந்தை முத்தையா,முத்துக்குமார், மீன் கடை சுலைமான், முன்னாள் கவுன்சிலர் மகாலட்சுமி , ஜோசப் செபா, மார்க்கெட் பொன்ராஜ், ஜெயகுமார்,பொம்மாச்சி பாலமுத்து, ரபீக்,  பார்த்திபன், ஜெயராஜ், முத்துக்குமார், டைமன் தாமேதரன், புதுத்தெரு சரவணன், மோகன், செந்தில்குமார், கணேஷ்,அரவானூர் பன்னீர்செல்வம், கெயிட்டி ராஜேந்திரன்,ஒத்தக்கடை மகேந்திரன்,எஸ் எம் டி மணிகண்டன், வண்ணாரப்பேட்டை ராஜன்,இளநீர் ராஜேந்திரன், எடத்தெரு கிருஷ்ணன், உமாராணி, ரகமதுல்லா, ஆக்னஸ் டெய்சி, பழனி, ஹனிபா, பீட்டர்,காளி நாராயணன், ராஜாகோபால், எ.தூர்.சரவணன், துரைசாமி,தென்னூர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.