Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமை கண்டனப் போராட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

0

'- Advertisement -

Ad banner

காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட தஞ்சையில் ஆகஸ்ட் 3 கண்டனப் போராட்டம்.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நதிநீரை உரிய முறையில் பெற்றுத் தர வலியுறுத்தியும், மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய,மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பயிர்க் கடன் தள்ளுபடியில் நிலவும் குளறுபடிகளை மாநில அரசு உடனடியாக களைய வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம்

வருகின்ற திங்கட்கிழமை ஆகஸ்ட் 3 அன்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இப்போராட்டத்திற்கு கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்கிறார்.

இது வெறும் அரசியல் நிகழ்வு மட்டுமல்ல; தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மக்களின் குடிநீர் உரிமையையும் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமைப் போராட்டமாகும்.

 

இந்த ஆர்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், வட்டம், வார்டு மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, இந்த ஜனநாயக உரிமைப் போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .

என திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.