திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
தந்தை போலீசில் புகார்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56) இவரது ( 21 வயது) மகள் கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் உள்ள ஒரு தனியார் பருத்தி ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ஊருக்கு வந்தார் அதன் பின்னர் நேற்று தந்தையும் மகளும் தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் புறப்பட்டனர் . இந்த பஸ் திருச்சி பஞ்சபூரில் மதியம் ஒரு மணி அளவில் வந்தடைந்தது. பின்னர் இரண்டு பேரும் பஸ்ஸிலிருந்து இறங்கினர் .. அப்போது மகள் தந்தையிடம் தண்ணீர் தாகமாக இருக்கிறது ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வாருங்கள் என தந்தையிடம் கூறியுள்ளார் . உடனே சத்தியமூர்த்தி அங்குள்ள பெட்டி கடைக்கு சென்று தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மகள் மாயமாகிவிட்டார் பஸ் முழுவதும் தேடிப் பார்த்தார் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதன் பின்னர் சத்தியமூர்த்தி பேருந்து நிலையம் முழுவதும் தேடிப்பார்த்த பின்னர் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .. அதன் பேரில் வழக்கு பதிவு செய்தார் போலீசார் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர் .

