அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை மற்றும் திருச்சி அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை ஆகியவற்றுக்கு முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,திருவெறும்பூர் மண்டல தலைவர் மதிவாணன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி,சௌந்தர்ராஜன் மற்றும் பகுதி செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் வட்டச் செயலாளர் ஒன்றிய கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர் ..

