Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர்

0

'- Advertisement -

செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர்.

Ad banner

ஞாயிற்றுக்கிழமை அன்று (13.9. 2026.) இரவு தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அற்புதராஜ் (வயது 20 ) என்பவர் தனது நண்பரின் திருமணத்திற்கு சென்று விட்டு அந்தியோதயா விரைவு வண்டியில் பயணம் செய்து வந்தபோது தனது மொபைல் போனை சார்ஜரில் போட்டு விட்டு தூங்கினார் .. கண் விழித்துப் பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் . . செல்போன் காணாமல் திருச்சி இரும்பு பாதை காவல் துறை போலீசாரிடம் புகார் அளித்தார், அந்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் நடைமேடையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த நூர் முகமது என்பவரின் மகன் சாதிக் பாஷா (வயது 41 ) செல்போனை திருடியது தெரிய வந்தது அதனை தொடர்ந்து

திருட்டு போன செல்போன் பறிமுதல் செய்து, மேற்படி நபரை திருச்சி இருப்புப் பாதை உதவி ஆய்வாளர் செல்வி கவிதா கைது செய்து, திருச்சி நீதிமன்றத்தில் 12 நாட்கள் நீதிமன்ற காவல் பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.