சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இல்லை .சமயபுரம் மதுக்கடையில் பட்டப்பகலில் நடந்த படுகொலை… பதில் சொல்லுமா தவெக அரசு?
மதுக்கடைகளில் தொடரும் கொலைகள் சமயபுரத்தில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை . தமிழக அரசின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் கண்டனம்
சமயபுரம் அருகே அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தகராறில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருதூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (வயது 30). சமயபுரம் நால்ரோடு அரசு மதுபானக் கடையில் மது வாங்கச் சென்றபோது, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது.
கும்பலில் இருந்த மர்ம நபர் பிரகாஷின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடி விட்டனர்.கழுத்தை அறுத்ததனால் ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாக பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.
தமிழக வெற்றி கழக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் போதிய சரக்குகள் கிடைக்காததால் சரக்குகள் இருக்கும் கடைகளில் (உதாரணமாக இன்று திருச்சி குட்ஷேட் பாலம் இறக்கத்தில் உள்ள கடை டிவிஎஸ் டோல்கேட் மற்றும் முதலியார் சத்திரம் கடைகளில் சரக்குகள் இல்லாமல் கடைகள் மூடப்பட்டுள்ளது) கும்பல் அலைமோதுகிறது,இதனால் அந்த கடைகளில் கும்பலை சரி செய்வதற்கு போதிய பாதுகாப்பு மற்றும் வரிசை ஒழுங்குமுறை இல்லாததே இதுபோன்ற தொடர் வன்முறைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

