Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் மதுபானங்கள் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் மூடல்,அரசுக்கு மாதம் பல லட்சம் செலுத்தி வரும் உரிமையாளர்கள் வேதனை

0

'- Advertisement -

திருச்சி மாநகரில் கடந்த சில வாரங்களாக டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் சரிவர சப்ளை இல்லை என்ற புகார் உள்ளது .. அப்படியே வந்தாலும் 140, 170 ரூபாய் மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது ..

Ad banner

தற்போது திருச்சி மாநகரில் பெரும்பான்மையான கடைகளில் எந்த வித சரக்குகளும் இல்லை,அப்படியே வந்தாலும் இரண்டு மூன்று பெட்டிகள் வந்தவுடன் விற்று விடுகின்றது,இதனால் விற்பனையாளர்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் கடையில் சும்மா அமர்ந்து உள்ளனர்,இதனால் கடைகளுக்கு வரும் குடிமகன்கள் எதுக்குடா கடையை திறந்து வைத்திருக்கிறீர்கள் என விற்பனையாளர்களை பார்த்து ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர், இதனால் விற்பனையாளர்களுக்கும் மதுப்பிரியர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.தமிழக வெற்றி கழக அரசு சம்பளத்தை ஏற்றி இதை போல் வருபவர் போவர்களிடம் எல்லாம் ஆபாச வார்த்தைகளால் திட்டு வாங்குவதற்கு தானா என கொண்டு புலம்பி வருகின்றனர் விற்பனையாளர்கள் …

இதைவிட டாஸ்மாக் கடைகளில் பார் எடுத்து நடத்தும் உரிமையாளர்களின் புலம்பல் அதிகமாக உள்ளது, மாதம் மாதம் வாத்து உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு மதுக்கூடங்களுக்கு தகுந்தார் போன்று ரூபாய் ஒரு லட்சம் முதல் மூன்றரை லட்சம் வரை டிடி எடுத்து கட்டி வருகின்றனர்,ஆனால் கடைகளில் சரக்குகள் இல்லாததால் வாரில் சாப்பிட யாரும் வருவதில்லை,ஆனால் வேலை செய்பவர்களுக்கு தினமும் சம்பளம் வழங்க வேண்டும்,காவல்துறைக்கு தினமும் பீட் காசு 500 ரூபாய் வழங்க வேண்டி உள்ளது இதெல்லாம் எங்கள் சொந்த பணத்தில் இருந்து தான் இருந்தால் தந்து கொண்டிருக்கிறோம், இதற்க்கு எப்பொழுதுதான் விடிவுகாலம் என யாருக்கும் தெரியவில்லை என வேதனையில் புலம்பி வருகின்றனர்.

இதற்கெல்லாம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க. விக்னேஷ் பதில் சொல்வாரா ?

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.