திருச்சி சுப்ரமணியபுரம் உள்பட மாவட்டத்தில் 1, 165 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை
16ம் தேதி காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் மொத்தம் 1, 165 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகரில் 233 சிலைகளும் புறநகரில் 932 சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
அகில இந்திய இந்து மகா சபா சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஏற்பாட்டில் 5 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சிலைகளுக்கு சிலை அமைப்பாளர்கள் உட்பட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று முதல் மூன்று நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருக்கும்.மேற்கண்ட மூன்று நாட்களும் பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படும் இதைத் தொடர்ந்து 3வது நாளான 16ம் தேதி விநாயகர் சிலைகள் திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்படும் ..
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்பி மேற்பார்வையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் மூன்று நாட்கள் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி,கொள்ளிடம் மற்றும் அந்தந்த ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது ..இதற்காக 16 மற்றும் 17ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

