திருச்சியில் சூதாட்டம் ஆடிய 12 பேர் கைது. சீட்டு கட்டுகள் பணம் பறிமுதல் ..
திருச்சி பாலக்கரை பகுதியில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டபோது அங்க பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த அசோக் குமார் (வயது 45,) ஈஸ்வரன் (வயது 46), அருண்குமார் (வயது41), குணா (வயது29), மணிகண்டன் (வயது34), மணிகண்டன் (வயது38), ஆகிய 6 பேரை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதே போல் குஞ்சான் கொல்லை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடத்தியதாக ஜீவானந்தம் (வயது 66,) அரியமங்கலத்தைச் சேர்ந்த தனபால் (52), பால் பண்ணை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 60), மரக்கடையை சேர்ந்த இளங்கோவன் (67,) ஸ்ரீரங்கத்தை சேர்ந்த குணசேகரன் ( 45,) தாமோதரன் ( 57) ஆகிய 6 பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 4,790 பணம், சூதாட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகபாலக்கரை காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்..

