திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த இருப்புப் பாதை போலீசார் .
திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ குட்கா புகையிலை, ஹான்ஸ், பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் .
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 14/09/26ம் தேதி திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி சிறப்பு ரோந்து அலுவலாக எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணி மற்றும் கவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம், ராஜ்குமார் ஆகியோர்
விழுப்புரம் இரயில் நிலையத்தில் ஹஸ்ரத் நிஜாமுதீன் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் வண்டியில் , ஏறி திருச்சி வரை வந்ததில் நடைமேடை எண் 04ல் 21.35 மணிக்கு சோதனை மேற்கொண்டதில்
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா , குட்கா, போன்ற போதைப் பொருட்களை முன்புறம் உள்ள பொது பயண பெட்டியில் 03 சோல்டர் பேக் இருக்கைக்குக் அடியில் கேப்பாறட்டு இருந்தது பின்புறம் உள்ள பொது பயணப்பெட்டியில் சோதனை செய்ததில் 02 சாக்கு பையில் குட்கா புகையிலை, ஹான்ஸ், பாக்கு பாக்கெட்டுகள் இருந்தன, இதன் மொத்த எடை 37கிலோ 100 கிராம் ஆகும் .. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது கொடுத்து வழக்கு பதிவு செய்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

