Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் . திருச்சி திண்டுக்கல் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .

0

'- Advertisement -

தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் . திருச்சி திண்டுக்கல் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு .

Ad banner

திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள சத்திரப்பட்டி, வடக்கு அரியாவூர், தெற்கு அரியாவூர், அம்மாபேட்டை, வடசேரி, கீழப்பட்டி, பூலாங்குளத்துப்பட்டி, இனாமாத்தூர் ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வயதானவர்கள்,பெண்கள் குழந்தைகளுடன் மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதேபோல் நேற்றும் மின்தடை ஏற்பட்டதால் இக்கிராம மக்கள் ஒன்று திரண்டு நேற்று இரவு திருச்சி- திண்டுக்கல் சாலையில் சத்திரப்பட்டி அரியாவூர் சந்திப்பு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தமிழ்மணி, ஸ்ரீரங்கம் தாசில்தார் செல்வகணேஷ், மின்சார வாரிய அதிகாரி சிவகாமி, ஜீயபுரம் டிஎஸ்பி சங்கர் மற்றும் ராம்ஜி நகர் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது ஒரு பெண்மணி தாங்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் வாக்களித்தோம் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் இல்லை என ஆனால் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை …கடந்த ஆட்சியில் இல்லாத பின்பற்றி தற்போது இந்த ஆட்சியில் உள்ளது ..இன்றும் சாலை மறியல் போராட்டம் செய்ததால் தான் இந்த பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வந்தனர் என கூறி வருத்தப்பட்டார் அந்த பெண்மணி

இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 5 கிலோ மீட்டர் அளவிற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.