திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகளை பறிக்க முயன்ற ஜெய்லர் மகன் உள்பட 4 பேர் சொகுசு காருடன் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே ட்ராவல்ஸ் அதிகாரியிடம் இருந்து ரூ 20 லட்சம் நகைகள் பறிக்க முயன்ற ஜெய்லர் மகன் உள்பட 4 பேர் சொகுசு காருடன் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முதுகுளத்தூர் கருங்குளம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 52 ) தனியார் டிராவல்ஸ் நிறுவன மேலாளர். இவர் வெளிநாடுகளில் இருந்து வருவோரின் நகைகளை வாங்கி வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது அந்த வகையில் தொழில் நிமித்தமாக நேற்று முன்தினம் திருச்சி வந்து உள்ளார் . பின்னர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் அவர் சிவகங்கை மாவட்டம் பாரதி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரிடம் இருந்து ரூ 20 லட்சம் மதிப்பிலான
நகைகளை வணிக ரீதியாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று காலை அந்த நகைகளுடன் திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்று உள்ளார். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த நகைகளை பறிக்க முயன்று உள்ளனர் . இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஸ்வரன் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அந்த நான்கு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து பின்னர் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர் . பின்னர் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில் கைதானவர்கள் சென்னை திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் நேதாஜி தெரு பகுதியை சேர்ந்த கருணாகரன் (வயது 44 ) கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அருள்மணி (வயது 32) சென்னை புழல் சிறை ஜெய்லர் பாரத் கென்னடி மகன் சுதன் ராம் தேவேந்திரா, (வயது 32 ) சிவகங்கை குடிக்கரை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 48) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் வெங்கடேஸ்வரன் நகை வாங்க வருவதை ஏற்கனவே நோட்டமிட்டு திட்டமிட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .. இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

