Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

த.வெ.கவிற்கு எதிர்க்கட்சி அதிமுக தான் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மனோகரன்

0

'- Advertisement -

த.வெ.கவிற்கு எதிர்க்கட்சி அதிமுக தான் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மனோகரன் பேச்சு …..

Ad banner

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி திருவானைக்காவலில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக அமைப்பு செயலாளர், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு கொறடா மனோகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் வரவேற்றார். கூட்டத்தில் மாநில சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், மாநில விவசாய அணி துணை செயலாளர் பேரூர் கண்ணதாசன், மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன் பேசும் பொழுது

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜென்சி கூட்டம் மாறுதல் வேண்டும் என்று மாற்றி வாக்களித்தார்கள். ஆனால் நாட்டில் எந்த மாற்றமும் நடைபெறவில்லை. திமுக ஆட்சியைப் போன்று கொலை, கொள்ளை கற்பழிப்பு விலைவாசி உயர்வு போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பெண்கள், பொது மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். அதை இன்று அனைவரும் உணருகிறார்கள். இன்றைக்கு த.வெ.க.விற்கு எதிர் கட்சி அதிமுக தான். ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் பொழுது சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். ஆனால் அந்த நாள் வரை இந்த ஆட்சி நீடிக்குமா என்பது சந்தேகம் தான்.எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வருகின்ற தேர்தலில் வென்று எடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்க பாடுபட வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கவிதா, ஜெயந்தி, கோப்பு நடராஜ் முத்து கருப்பன், செல்வராஜ், சுந்தர்ராஜன்,ராஜகோபால், சோனா விவேக், கண்ணுச்சாமி வழக்கறிஞர்கள் வெங்கடேசன், முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் திருவானைக்காவல் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி நன்றி கூறினார்.

கூட்டத்தில் பெட்டவாய்த்தலை அண்ணா பேருந்து நிலைய பெயரை மாற்றி அமைக்க முயற்சி செய்யும் த.வெ.க. அரசை கண்டித்து வருகிற 12ந்தேதி பெட்டவாய்த்தலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். வருகின்ற 13ந் தேதி காலை திருச்சி புறநகர் கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர்  டிஎன். சிவக்குமார் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெட்டவாய்த்தலையில் சிறப்பான வரவேற்பு அளிக்க திரண்டு வர வேண்டும் வருகின்ற 15 ந்தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மணிகண்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.