Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு

0

'- Advertisement -

திருச்சியில்  தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் சாவு

Ad banner

திருச்சி  ஜாபர்ஷா தெரு கோரி குளம் பகுதியை சேர்ந்தவர் கோபி இவரது மகன் பாரதி (வயது 32) இவர் திருமணம் ஆகாதவர் . பெரிய கம்மாள தெருவில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 7 ந்தேதி வீட்டில் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் அமர்ந்து இருந்த பாரதி திடீரென்று மேலே இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் பாரதி இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாரதியின் தாய் ராணி கோட்டை காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.