Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாவட்ட தடகள சங்கம் சார்பில் திருச்சியில் 2 நாட்கள் நடைபெற்ற மாவட்ட இளையோர் தடகள போட்டி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட இளையோர் தடகள போட்டிகள் திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் அண்ணா விளையாட்ரங்கில் செப்டம்பர்- 07.-08, ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

Ad banner

முதல் நாளான நேற்று 07.09.26 காலை 9.00 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இன்று 08.09.26 மாலை 6.00 மணிக்கு நிறைவேறியது.

இதில் இன்று 08.09.26 மாலை 6.30 மணிக்கு வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விழாவிற்கு திருச்சி மாவட்ட தடகள சங்க பொருளாளர் சி.ரவிசங்கர், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.சுரேஷ்பாபு, இணை செயலாளர் எம்.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி.நீலமேகம், முன்னாள் ரயில்வே தொழிலாளர் நல அதிகாரி B. சுந்தரமூர்த்தி, ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை தடகள சங்க இணைச் செயலாளர் எம். ரமேஷ் வரவேற்றார்.

இரண்டு நாள் நடைப்பெற்ற போட்டியில் சுமார் 2400 க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்துக் கொண்டார்கள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 8, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுடைய ஆண்- பெண் இருபாலருக்கான 100மீ, 200மீ, 400மீ,800மீ,1500மீ,உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற தடகள போட்டிகள் நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவில் பனானா லீப் உரிமையாளர் ஆர்.மனோகரன், நியூரோ ஒன் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.விஜயகுமார், காவேரி ஹாட்ஸ் சிட்டி, முதுநிலை மேலாளர் ஆண்ட்ரூஸ் நித்தியதாஸ், சுங்கவரி வரி துறை ஆய்வாளர் பிரான்சிஸ் சகாயராஜ், ஜி.எஸ்.டி மற்றும் கலால் துறை கே.ரகுபதி, சுங்கவரி துறை உதவி ஆனணயர் (ஒய்வு) எஸ்.பூபதி,SDAT விளையாட்டு விடுதி மேலாளர் கே.கண்ணன்,குருபிரசாத் உள்ளிட்ட பல கலந்துக் கொண்டு விளையாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்.

ஒட்டுமொத்த சாம்பியன் முதல் இடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 25 தங்கம், 10 வெள்ளி, 14 வெண்கலம், இரண்டாம் இடம் பேத்தார் தடகள சங்கம் 13 தங்கம்,7 வெள்ளி,8 வெண்கலம் பெற்றார்கள்

மேலும், தனி நபருக்கான சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் தனி நபர் கோப்பை வழங்கப்பட்டது. தகுதி அடிப்டையில் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், திண்டுக்கலில் அக்-02 முதல் 04ம் தேதி தொடங்கும் அனைத்து மாவட்டங்கள் இடையிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யபட்டு உள்ளனர்.

நிகழ்வு மேலாண்மை தடகள தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.நடராஜன்,   உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஹிரிஹர ராமச்சந்திரன் நிகழ்ச்சி தொகுப்பாளர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

விழாவின் முடியும் முனைவர் சத்திஸ் முர்த்தி நன்றியுரை கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.