Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .

Ad banner

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் சந்திரபோஸ் (வயது 21) இவர் உப்பிலியபுரம் எரக்குடி பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவரை கடந்த 2024 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். குழந்தை இல்லை சந்திரபோஸ் மைசூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு

ஊர் திரும்பிய அவர் எரக்குடியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.நேற்று இரவு வழக்கம் போல் அறைக்கு தூங்கச் சென்ற அவர் அதிகாலையில் பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.

இது பற்றி அவரது தந்தை ராமன் உப்பிலியபுரம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் உப்பிலியாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ..

மற்றொரு சம்பவத்தில் திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமையநல்லூர்

பகுதியில் உள்ள ஒரு வேளாண் தோட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் புங்க மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. இது பற்றி மல்லியம்பத்து

கிராம நிர்வாக அதிகாரி ஜெயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.