திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி..
தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் மேம்பால பகுதியில் சென்றபோது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர் கோபிநாத் வாகனத்திற்கு அருகாமையில் வந்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை லாபகமாக பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார் . இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் விடாமல் அந்த வாலிபரை தனது வாகனத்தில் துரத்திச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் பறித்த அந்த வாலிபர் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார் .. உடனே கோபிநாத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். கேகே நகர் காவல் நிலைய போலீசார் அந்த வாலிபரை கைது செய்து செல்போனை மீட்டனர் . விசாரணையில் கைதானவர் ஸ்ரீரங்கம் மாம்பழ சாலை கோலமாவு தெரு பகுதியைச் சேர்ந்த விஷால் (வயது 20 ) என்பது தெரிய வந்தது .
இந்த சம்பவம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

