திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் 22 ம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்
நேற்று திங்கட்கிழமை (7 /9 /2026 ) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 22 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் தனியார் பார்மசி உடன் இணைந்து ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கண்டறிதல் முகாம் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்றது ..
இந்த முகாமில் நீதிமன்றத்திற்கு வந்த காவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

