இரண்டரை டன் கடத்தல் ரேஷன் அரசியை மடக்கிப்பிடித்த திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் … 2 பேர் கைது
திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில், திருச்சி அலகு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக துவாக்குடி டோல் பிளாசா அருகே நேற்று வாகன தணிக்கை செய்தனர்
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் 2500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, நடு காவிரி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணிகண்டன் மற்றும் காளிதாஸ் மகன் லோகநாதன் ஆகியோர் வாகனத்தில் ரேஷன் அரிசியைச் சட்ட விரோதமாகக் கடத்திய குற்றத்திற்காக அரிசி மற்றும் வாகனத்தைக் கைப்பற்றி திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதோடு இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, திருச்சி மாவட்ட மத்தியச் சிறையில் அடைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

