இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் அடுத்த மாதம் 15ந் தேதி பேரணி- மாநாடு
திருச்சியில் வருகிற அக்டோபர் 15 ந்தேதி இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பேரணி மற்றும் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. இது குறித்து திருச்சி – கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள வெண்மணி இல்லத்தில் சிபிஐ(எம்) மத்திய குழு உறுப்பினர் என். குணசேகரன் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சுவாமிநாதன், சிபிஐ மாநில துணை செயலாளர்கள் என்.பெரியசாமி, எம் .ரவி, சி.பி.ஐ(எம்.எல்) மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ். பாலசுந்தரம் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் விடுதலை ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து ஒரு மாற்றத்தை நோக்கி செல்லும் வகையில் தமிழ்நாடு இனி இடது பக்கம் என்ற ஒற்றை நோக்கில் திருச்சியில் அக்டோபர் 15 ஆம் தேதி பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் குறித்து அதற்கான தீர்வுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதம் செய்து கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். சுதந்திரம்பெற்ற காலம் முதல் ஒற்றை கட்சி ஆட்சி செய்ததை மாற்றி இரு கட்சிகள் ஆட்சி செய்துஅதனை மாற்றும் வகையில் மாற்றம் வரும் என்று எண்ணி புதிய கட்சிக்கு வாய்ப்பு அளித்தார்கள் அந்த மாற்றம் ஏமாற்றமாக யாகி விடக்கூடாது.
ஒரு மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு எங்களுயை 3 இயக்கங்கள்சேர்ந்து மக்கள் பணியாற்றும்.ஒரு காலத்தில் இடதுசாரி கட்சிளுக்கு முக்கியத்துவம் இருந்த நிலையை இனி உருவாக்க முயற்சி செய்வோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

