Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார் .

0

'- Advertisement -

ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி இரும்பு பாதை போலீசார் ..

Ad banner

திருவண்ணாமலை, வெள்ளேரி பகுதியை சேர்ந்தவர் ரவி இரவது மனைவி அமுல் (வயது 49) இவர் நேற்று முன்தினம் (10 ம் தேதி) ராமேஸ்வரத்தில் இருந்து தனது மகள் கீர்த்திகா உடன் ராமேஸ்வரத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு போட் மெயில் எக்ஸ்பிரஸில் விழுப்புரம் செல்லும் வழியில் திருச்சி ரயில் நிலையம் நடைமேடை எண் 5 நின்றபொழுது ஊனமுற்றோர் பெட்டியில் சார்ஜில் இருந்த தனது செல்போனை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என்று திருச்சி இரும்பு பாதை காவல்துறை அதிகாரிகளிடம் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர் போலீசார் . அப்போது அருகில் உள்ள பொதுப் பெட்டியில் பயணம் செய்த பீகார் மாநில வாலிபர் ராஜியாதவ் என்பவனின் மகன் கோபால் குமார் (வயது 23) என்ற நபரை சோதனை செய்ததில் தான் திருடியதை ஒப்புக்கொண்டார். அந்த பீகார் மாநில வாலிபர் மீது உதவி ஆய்வார் கவிதா வழக்கு பதிவு செய்து திருட்டு போன பொருளை கைப்பற்றி பீகார் மாநில வாலிபரை கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாஜிஸ்ட்ரேட் உத்தரவுபடி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.