Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.

0

'- Advertisement -

திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.

Ad banner

திருச்சியிலிருந்து இனாம் குளத்தூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று மணப்பாறைக்கு சென்று வருகிறது .. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தனியார் பேருந்து திருச்சி- திண்டுக்கல் சாலையில் இனாம் குளத்துர் செல்லாமல் மணப்பாறைக்கு சென்று வந்துள்ளது ..

இதனால் ஆத்திரமடைந்த இனாம் குளத்தூர் கிராம பொதுமக்கள் நேற்று அந்த பேருந்தை அம்மாபேட்டை அருகே உள்ள ஒர் தனியார் கல்லூரியின் முன் சிறை பிடித்தனர்.

இதனை அறிந்து அங்கு வந்த இனாம் குளத்தூர் காவல் நிலைய போலீசார் பேருந்தை மீட்டு காவல் நிலையம் எடுத்து சென்றனர். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இவ் வழிதடத்தில் பேருந்து செல்வதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.