Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூரில் இந்திய நாடார் பேரவை ஜெடிஆர் சுரேஷ் நில விவகாரத்தில் ரூ.5 லட்சம் மாமுல் கேட்ட திமுக கவுன்சிலர்

0

'- Advertisement -

Ad banner

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் ரூ.5 லட்சம் கேட்ட பரபரப்பு ஏற்படுத்திய திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம்.

இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர் ஜே டி ஆர் சுரேஷ்க்கு சொந்தமான 1,500 சதுர அடி நிலம் விக்னேஷ் நகரில் உங்களது.

தனக்குச் சொந்தமான நிலம் என்றும், அதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நிலத்தை அளவீடு செய்ய வந்தபோது, திமுக கவுன்சிலர் நீலமேகம் மற்றும் சிலர் தடுத்து நிறுத்தியதாக ஜெ டி ஆர் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்த லேஅவுட் 1991 இல் போடப் பட்டது ஆனால் அதற்கு முன்பு 1987-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக இந்த நிலத்தை வாங்கியதாகவும், உட்பிரிவு செய்யப்பட்டு பத்திர பதிவு செய்து தனிப்பட்டமும் வாங்கி உள்ளார் சுரேஷ்.இந்த இடத்தை அளந்து கல் ஊன்றுவதற்கு நில அளவையர் வந்தபோது பொது இடத்திற்கும் பட்டா இடத்திற்கும் லேஅவுட் வரவில்லை எனக்கூறி இடத்தை அளக்க தடை விதிக்கின்றனர் நீலமேகம் தலைமையில் வந்த நபர்கள்.இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் நான்கு முறை புகார் அளித்து உள்ளதாகவும் சுரேஷ். கடந்த எட்டு மாதங்களாக வருவாய்த் துறை மற்றும் காவல்துறையிடம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் நிலத்திற்குள் செல்ல விடாமல் மிரட்டி விரட்டியதாகவும், காவல்துறையினர் முன்னிலையிலும் தடை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார், இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், திருவெறும்பூர் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி( தேதி குறிப்பிடாமல்), அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தாசில்தார் தலைமையிலான பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

42 வது வார்டு கவுன்சிலர் நீலமேகம் எனது இடத்தில் சுத்தம் செய்து கல் ஊன்றுவதற்கு அவருக்கு ரூபாய் 5 லட்ச ரூபாய் பணம் கேட்கிறார் எனது இடத்தில் கல் உண்ணுவதற்கு நான் எதற்காக அவருக்கு பணம் தர வேண்டும்.வருகின்ற அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் லஞ்சம் லாவண்யம் இல்லா தூய ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வரிடம் எனது ஆவணங்கள் அனைத்தையும் முறையாக அனுப்பி புகார் அளிக்க உள்ளேன் என கூறினார் இந்திய நாடார் பேரவை தலைவர் சுரேஷ்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.