Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல லட்சம் கொடுத்து மாநகர மகளிர் அணி செயலாளர் பதவியைப். பெற்ற நசீமா பாரிக். செயல்படாதவர்களுக்கு பதவி எதற்கு ? மாநகர அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் செயல்படாத நபர்களின் விபரம் .

0

'- Advertisement -

திருச்சி ஆஇஅதிமுக மாநகர மாவட்ட செயலாளராக சீனிவாசன் ஜெ. சீனிவாசன் பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்து நிர்வாகிகளையும் பாகுபாடு இன்றி சிறப்பாக செயல் பட்டு வருகிறார் .

 

ஆனால் மாநகர மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பதவி ஏற்பதற்கு முன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவிக்கு ரூ. 20 லட்சம் கொடுத்து பதவியைப் பெற்றவர் தொழிலதிபர் நசீமா பாரிக் .

 

பெரும் பணக்காரரான நசீமா பாரிக் ஏசியிலே இருந்து தனது தொழிலை கவனத்து வருபவர். வெயிலில் வந்தால் வேர்க்கும் எனக் கூறி திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்வதில்லை .

 

இவருக்கு முன்பு திருச்சி அதிமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர் இருந்த தமிழரசி சுப்பையா பாண்டியன் மகளிர் அணி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சி இல்லாமல் எந்த ஒரு அதிமுக கட்சி நிகழ்ச்சி என்றாலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரே புடவை வாங்கி கொடுத்து கும்ப மரியாதை உடன் மாவட்ட செயலாளர்களை வரவேற்பார் . அப்படி சிறப்பாக பணியாற்றியவர் தற்போது அதிமுகவில் இல்லை என்பதால் அந்தப் பதவியை இருவது லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியவர் நசீமா பாரிக் ..

 

இவரிடம் ஒரு பத்திரிகையாளர் சென்று உங்களது நிகழ்ச்சி பற்றிய செய்தி வந்துள்ளது எனக் கூறி பத்திரிக்கையை கொடுத்தால் அந்தப் பக்கம் சென்று டிரைவர் இடம் கொடுங்கள் என கூறுவார். ண் தாருங்கள் என்றாலும் டிரைவர் என்னை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தான் சொல்லுவார் . பத்திரிகையாளர்களை ஏதோ அன்னியர்கள் போன்றும் பத்திரிகைகளை தொட்டால் தீட்டு என பாவித்து தவித்து வருபவர் நசீமா பாரிக் . இதுபோன்று கட்சியில் எந்தவித செயல்பாடும் இன்றி பணியாற்றி வருபவரை அதிமுக மகளிர் அணி மாவட்ட செயலாளராக இருந்தால் கட்சி எப்படி வளரும். விரைவில் தேர்தல் வரும் நேரத்தில் பணம் மட்டும் இருந்தால் வெற்றி பெற முடியாது. மக்களோடு மக்களாக பத்திரிக்கையாளர்களையும் அனுசரித்து சென்றால் தான் ஒருவர் வெற்றி பெற முடியும் . ஆனால் நசீமா பாரிக் நான் கவுன்சிலர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணத்தால் திருச்சி மாநகராட்சி மேயராக பதவியேற்பேன் என அவரது அள்ள கைகளிடம் கூறி வருகிறாராம் .

.

Suresh

இவரைப் போன்று செயல்படாத முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் நீக்குவாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பாரா என்பதே கட்சியில் பல ஆண்டுகாலம் பணியாற்றி வரும் அடிப்படை தொண்டர்களின் எதிர்பார்ப்பு ஆகும் .

 

மேலும் திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக வெல்லமண்டி நடராஜன் இருந்த போது பல லட்சம் பணம் கொடுத்து மற்றும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் குருவிகளுக்கு தலைவராக உள்ளவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டது .

 

சீனிவாசன் அவர்கள் பதவி ஏற்ற பின்பும் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பதவிக்காக ரூ.15 லட்சம் கொடுத்த நபர் அந்தப் பதவி கிடைக்காத விரக்தியில் கட்சிப் பணியில் ஈடுபடுவதில்லை .

 

இதேபோன்று மாநகர மாவட்ட அதிமுக பொருளாளர் பதவிக்கு ரூ.30 லட்சம் கொடுத்து பதவியைப் பெற்றவர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் . ரூ. 15 லட்சம் இங்கே ரு.15 லட்சம் சேலத்தில் என மொத்தம் ரூபாய் 30 லட்சம் கொடுத்து இந்தப் பதவியை பெற்றுள்ளார் .

 

அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் பொன்னர், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் லோகநாதன். இளைஞர் அணி ரஜினிகாந்த் . ஐடி பிரிவு வெங்கட் பிரபு , இலக்கிய அணி பாலாஜி, ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சில்வர் சதீஷ்குமார் , எடமலைப்பட்டி புதூர் வட்ட செயலாளர் (லாட்டரி வியாபாரி ) வசந்தம் செல்வமணி. இவர்கள் தங்களது பதவிக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்ற முழு விவரம் விரைவில் முழு ஆதாரத்துடன்

தேர்தல் வரும் நேரத்தில்  இதுபோன்று செயல்படாத நபர்கள் முக்கிய பொறுப்பில் இருந்தால் திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவது கேள்விக்குறிதான் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.