மணப்பாறை; ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வு’பழமை மாறாமல் வழிபாடு மேற்கொண்ட கிராம மக்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தெற்கு பொய்கைபட்டிக்குட்பட்ட ஏழு கன்னிமார் நாகம்மாள் கோவில் திருவிழாவிற்கான பிடிமன் கொடுத்தல் நிகழ்வானது ஊர் நாட்டாண்மை பி.வி.என் கோபாலகிருஷ்ணன் தலைமையில் 17 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் வளாகத்தில் உள்ள வழிபாடு மேற்கொண்டு மந்தையில் முதல் வழிபாடு மேற்கொண்டு ஆனாம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி மந்தையிலும், நம்பம்பட்டியில் உள்ள விருமன் பாறையிலும் வழிபாடு செய்தனர்.
சுமார் 12 கிலோமீட்டர் தூரம் காட்டு பாதையாக, வயல்வெளி பகுதிகளில் பழமை மாறாமல் நடந்து சென்று கிராம மக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் 17 ஊர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பெரியக்காள், பொன்னர், சங்கர், ஏழு கன்னிமார், நாகம்மாள் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளும் கிராம மக்களின் வேண்டுதல்களான பசு மாடு, ஆடு, கோழி,நாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் செய்யப்படுவதற்கான பிடி மண் சிலையை செய்யக்கூடிய வேளாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

