
திருச்சியில் அரியமங்கலம், காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேர் கைது.
அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் வந்துரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த குணா ஆரோக்கியம் (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதே போல் கல்பாளையம் பொது கழிவறை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த மணிரத்தினம் (வயது 26) என்பவரை காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ரூபாய் 1900 செய்யப்பட்டது.

