திருச்சியில் விபத்து
இருசக்கர வாகனம் மோதி கணவன் சாவு

மனைவி கண் முன்னே நடந்த பரிதாப சம்பவம்
திருச்சி, உறையூர், வடிவேல் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது35).இருவரும் நேற்று முன்தின 13 ந்தேதி உறையூர், குறத்தெரு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், இவர்கள் மீது மோதினார். இதில் தியாகராஜன் தலையில் பலத்த காயமடைந்தார்.புவனேஸ்வரிக்கு லேசான காயம் ஏற்பட்டது இதை எடுத்து இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த தியாகராஜன் மே 14ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரிக்கின்றனர்.இந்த விபத்து சம்பவம் மனைவி கண் முன்னே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது