Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

0

'- Advertisement -

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்

Ad banner

கருமண்டபம் கிளை, அரவிந்த் கண் மருத்துவமனை – மதுரை மற்றும்

மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நீதி உதவியுடன்

இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .

 

இது குறித்து ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

14.06.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

கணேஷ் மெஸ், நெ. 10, நேரு நகர், கருமண்டபம், திருச்சி என்ற முகவரியில் முகாம் நடைபெற உள்ளது .

 

பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி, கண்புரை மற்றும் பார்வை குறைபாடு போன்ற அனைத்து கண்நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கண்புரை: அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் மதுரை அரவிந்த் கண மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்.

 

அவர்களுக்கு அறுவை சிகிச்சை, IOL லென்ஸ், மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து வசதி அனைத்தும் இலவசம்.

 

சர்க்கரை நோய் விழித்திரையை பாதிப்பால் திடீரென பார்வை இழப்பு ஏற்படலாம். சர்க்கரை நோய் உள்ளவரகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

 

கண்நீர் அழுத்து நோய்: 40 வயதுக்கு மேல் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கண்பார்வையை பாதிக்கும் ஒரு கொடிய நோய், கவனக்குறைவால் பார்வை இழக்கலாம்.

 

குழந்தைகளின் மாறுகண்ணை அலட்சியப்படுத்தாதீர், ஆரம்ப நிலையில் மட்டுமே மாறுகண்ணை சரிசெய்து இழந்தை பார்வையை மீண்டும் பெற முடியும்.

 

கிட்டபார்வை. தூரப்பார்வை. வெள்ளெழுத்து போன்ற பார்வைக்கோளாறுகள் இறுப்பின் தகுந்தபரிசோதனைக்கு பின் உரிய கண்ணாடி பரிந்துரைக்கப்படும்.

கண்ணாடி முகாம் நடக்கும் இடத்திலேயே ரூ.300/- விலையில் வழங்கப்படும்.

 

அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் இருதய நோய், இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுவரவும்.

 

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு 300 mg-க்கு இருக்கும் கண்புரை உள்ளவர்ள் மட்டுமே அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

 

மேலும் முதலில் பதிவு செய்யும் 300 நபர்களுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்படும்.

 

கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இம்முகாமிற்கு வரும்போது தங்களது முகவரி சான்றின் நகல் (ஆதார் அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை) மற்றும் கைபேசி எண் கொண்டு வந்து பெயர் பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு: P.இளங்கோவன், செல் :

94437 66869 / 97885 30004

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.