Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து

0

'- Advertisement -

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஜூன் 10-ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடும் தெரிவித்துள்ளார்.

Ad banner

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஜூன் 9-ம் தேதி மேற்கொள்ளப்படும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் தலைமை நீர்ப்பணி நிலையங்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாளை ஜூன் 10-ம் தேதி குடிநீர் விநியோகம் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்படுவதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.

 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II (KFW) ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 09.06.2026 இன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , வெல்- III (Aerator) மற்றும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II (KFW) ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை,மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர் சிவா நகர் , ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், தில்லைநகர்,அண்ணாநகர்,கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி , எம்.எம் நகர் மற்றும், திருவறும்பூர், வள்ளுவர் நகர், எல்லக்குடி,ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர், கணேஷ் நகர் விவேகனந்தர் நகர் மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை 10.06.2026 ஒருநாள் மட்டும் இருக்காது.

 

நாளை மறுநாள் வியாழக்கிழமை 11.06.2026 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் இருக்கும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்கண்டவாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.