Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சி அலுவலகத்தில் 2 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.நிர்வாகி கைது

0

'- Advertisement -

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகரில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

Ad banner

அந்த தகவலின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாரும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு தீவிர சோதனை செய்தனர். அங்கு பாக்கெட், பாக்கெட்டாக ஹான்ஸ் பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 கிலோ எடையிலான 104 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதுதொடர்பான விசாரணையில், ஸ்ரீரங்கம் பகுதி காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நடராஜன் (எ) பாதயாத்திரை நடராஜன் (வயது 65) விற்பனைக்காக புகையிலை பொருட்களை கட்சி அலுவலகத்திலேயே பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது. போதை பொருட்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் விஜய் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், தவெகவுடன் கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலேயே புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.