Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம் …….

0

'- Advertisement -

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

Ad banner

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (09.06.2026) செவ்வாய்க்கிழமை திருவெறும்பூர், பெட்டவாய்த்தலை, சிறுகமணி, அளுந்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்விவரங்கள் பின்வருமாறு

நாளைய மின் தடை:

திருச்சி பெட்டவாய்த்தலை, சிறுகமணி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க் கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையார் தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலியாண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுகமணி, பெருகமணி, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, கவுண்டம்பட்டி, குறிச்சி, பாறைப்பட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாளம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

திருச்சி மெயின்கார்டுகேட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில்தெரு, சிதம்பரம் மகால், பூசாரித்தெரு, சத்திரம் பஸ்நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன்ரோடு, சாலைரோடு, வாத்துக்காரத் தெரு.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லைதெரு, குறத்தெரு, நவாப்தோட்டம். நெசவாளர்காலனி, திருத்தாந்தோணிரோடு, டாக்கர்ரோடு, பி.வி.எஸ்.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள் நகர், சந்தோஷ்கார்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரி மங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்.ஏ.பி.பி. குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளைரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனை யக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.