திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் மற்றும் பர்சை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் .
திருச்சி ஸ்ரீரங்கத்தில் செல்போன் மற்றும் பர்சை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர் .
திருச்சி, மலைக்கோட்டை, மேட்டு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது57) இவர் நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் குளிக்க சென்று உள்ளார் .

அப்போது நீரில் நனையாமல் இருப்பதற்காக அவரது செல்போன் மற்றும் உடமைகளை படித்துறையில் வைத்துவிட்டு குளிக்க சென்ற போது மர்ம நபர் ஒருவர் அவரின் செல்போன் மற்றும் அவரது பர்ஸை திருட முயன்று உள்ளார். அவரை ஆறுமுகம் கையும் களவுமாக பிடித்து திருவரங்கம் குற்ற பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணனூரை சேர்ந்த சிவா (வயது 27) என்பது தெரிந்தது. இவரை ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்