Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடைபெறும் சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாட்டில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட தலைவர் எஸ் பி பாபு அழைப்பு .

0

'- Advertisement -

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில்

Ad banner

சில்லறை வணிகம் -சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாடு .

திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு அழைப்பு..

 

TVK ad

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் 42வது வணிகர் தின விழா சில்லறை வணிகம் சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாடு சென்னை படப்பை கரிசங்கால் பகுதியில்

நாளை (5.05.2025) திங்கட்கிழமை காலை தொடங்குகிறது.முதலில் 9.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.பொதுக்குழு மற்றும் வணிகர் தின விழா மாநாட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் சௌந்தர்ராஜன் என்கிற ராஜா தலைமை தாங்கி பேசுகிறார். மாநில பொதுச் செயலாளர் மெஸ்மர் காந்தன் வெள்ளையன் வரவேற்று பேசுகிறார்.

 

மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பாரத் உத்யோக் வியாபார் மண்டல் தேசிய தலைவர் பாபுலால்,குப்தா தேசிய செயலாளர் முகுந்த் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொள்கிறார்கள்.சில்லறை வணிகம், சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாட்டில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் அலைகடலென குடும்பம் குடும்பமாக திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.