Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் நகை, பணம் திருட்டு. மர்ம ஆசாமிக்கு வலை

0

'- Advertisement -

திருச்சியில்

Ad banner

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

 

கோட்டை காவல் நிலைய போலீசார் மர்ம ஆசாமிக்கு வலை வீச்சு .

 

கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 40) இவர் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக கரூரிலிருந்து திருச்சி வந்தார். பிறகு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் பேருந்தில் ஏறினார். அப்பொழுது அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார்.

பஸ்சில் ஏறிய சில நிமிடங்களில் அந்த பை அவரிடம் இருந்து காணாமல் போய்விட்டது.

அந்தப் பையில் 4 பவுன் நகை மற்றும் 8,500 பணம் இருந்தது திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி திருச்சி கோட்டை காவல் நிலைய குற்ற பிரிவில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் திருச்சி கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.