Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் மாடி படிக்கட்டு கைப்பிடி கம்பியில் அமர்ந்து மது அருந்தியவர் பரிதாப பலி .

0

'- Advertisement -

Ad banner

ஸ்ரீரங்கத்தில்
மதுபோதையில் வணிக வளாகத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி.

ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50) இவர் அழகிரி புரம் சோதனை சாவடி அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள படிக்கட்டு கைப்பிடி கம்பியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.

TVK ad

இதில் செல்வம் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துவிட்டார்.

தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

மேலும் இந்த சம்பவம் குறித்து
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.