Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மதுவுக்கு அடிமையான ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டு தற்கொலை .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

TVK ad

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகி அதிகளவில் மது குடித்து வந்துள்ளார்.

இதனால் அவரது மனைவி கவுகர் ஜான் மற்றும் அவரது மகன் தியானேஷ் ஆகியோர் வெங்கடேசை கண்டித்துள்ளனர். இதை தொடர்ந்து கடந்த ஜன. 18ம் தேதி தன் அறைக்கு உறங்கச்சென்ற வெங்கடேஷ் நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி அறையின் உள்ளே சென்று பார்த்தபோது வெங்கடேஷ் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் செஸன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.