விளையாட்டு வீரர்கள் அணியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர்களை சேர்க்க முடிவு.
மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.வளர்மதி, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சிவபதி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பூனாட்சி, ஜெ. பேரவை இணை செயலாளர் செல்வராசு, மகளிரணி துணை செயலாளர் பரமேஸ்வரி முருகன், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட க பொருளாளர் சேவியர்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இலக்கிய அணி ஸ்ரீதர்,மாணவர் அணி அறிவழகன், எம்ஜிஆர் மன்றம் அறிவழகன் விஜய், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்தி, இளைஞரணி தேவா, ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், கோப்பு நடராஜ் ஜெயக்குமார் , ஆதாளி மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து எடப்பாடி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்,மாவட்டம் முழுவதும் ஒன்பது பேர் கொண்ட பூத் கிளை அமைக்க வேண்டும்,மாவட்டம் முழுவதும் இளைஞர் பாசறை கிளைகளை ஒவ்வொரு பூத்திலும் உருவாக்கிட வேண்டும்,விளையாட்டு வீரர்கள் அணியில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.