Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 47 பேர் ரத்த தானம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார் .

0

'- Advertisement -

Ad banner

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு

திருச்சியில் திமுக இளைஞரணி சார்பில் 47 பேர் ரத்த தானம்.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதல்வருமான
உதயநிதி ஸ்டாலின்
47வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு நிகழ்வாக இன்று காலை மாபெரும் இரத்ததான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

TVK ad

இந்நிகழ்வில்
மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார்.
முகாமை மாவட்ட கழகச் செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி
இரத்ததானத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

முகாமில் திமுக மருத்துவ அணி துணைத்தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், பகுதி செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட பகுதி ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் வயதைக் குறிக்கும் வகையில் 47 பேர் முகாமில் ரத்த தானம் செய்தனர்.

முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் நன்றி கூறினார்.

ரத்ததான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவும் சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.